Wednesday 27 July 2011

ஒரு தத்தாரி கிளப்பின பீதியும் தமிழ் மணத்தின் பேதியும்


மறுபடி அந்த அச்சு பிச்சுவை பத்தியே அதான் சித்தூர் முருகேசனை பத்தித்தான் இந்த பதிவும். நான் ஏதோ ஒரு முருகேசனை பத்தி மட்டும் பேசறேன்னு நினைச்சுடாதிங்கோ. அந்த அபிஷ்டுவை போலவே அகாரணமா, ஒரு ஹேதுவே இல்லாம பிராமணாளை வறுத்து எடுக்கிற எல்லாத்தை பத்தியும் தான் பேசறேன்.

கருத்து சுதந்திரம்ங்கற பேர்ல கண்ட நாய்கள் கண்டதை குலைக்கலாம்.அதையெல்லாம் தமிழ் மணம் மணம் (?) பரப்பும். ஆனா அந்த அபிஷ்டுக்கள் வாசிக்கிற குற்ற பட்டியலுக்கு விளக்கம் கொடுக்க என்னை மாதிரி ஒரு பேக்கு வாயை திறந்தா குரள் வளையை நெறிக்குமா? மத்த திரட்டிகள்ளயும் இந்த வலைப்பூவை பதிஞ்சேன். ஒருத்தரும் நிராகரிக்கலை. தமிழ்மணம் காரா மட்டும் நிராகரிச்சுட்டா

இது என்னவித நியாயத்துல சேர்த்தினு புரியலை. தமிழ் மணத்துக்கு மட்டும் கொம்பா முளைச்சிருக்கு. நான் சொல்றேன். அந்த சித்தூர் முருகேசன் கிளப்பின பீதியால பேதியாகித்தான் என் வலைப்பூவை நிராகரிச்சுருக்கு.

அந்த சண்டாளப்பாவியோட பழம் பதிவுகளை புரட்டிக்கிட்டிருந்தப்ப தான் தமிழ்மணம் இந்த அரைவேக்காட்டோட பதிவையும் தடை பண்ணினதும், அதுக்கு இந்த தத்து பித்து கண்டதையும் உளறிவச்சிருக்கிறதும் தெரிய வந்தது.

கௌரவ சபையில திரவுதி வஸ்திராபரணம் நடந்தப்ப மவுனிகளா இருந்த பெரியமனுஷாளுக்கும் குருட்சேத்திரத்துல உரிய தண்டனை கிடைச்சதை எண்ணிப்பாருங்கோ .இப்பயாச்சும் வாய் திறவுங்கோ? ( அந்த திரவுபதியையே இந்த பிரகிருதி காமப்பேய்னு சொல்லி யிருக்கு. அதையும் இந்த வலையுலகமும், தமிழ் மணமும் சகிச்சிருக்கு. ஆனா என்னோட பதிவை பட்டியலிட கூட நிராகரிச்சிருக்கு )


தப்பு பண்றவாளைவிட அந்த தப்பை கண்டிக்காதவா தான் பெரிய தண்டனைக்குள்ளாவா.

முருகேசன் தான் பெட்டிப்படுக்கை கட்டிக்கிட்டு கிளம்பிட்டாரே .இன்னும் எதுக்கு அவரை விமர்சிக்கிறேன்னு இளகிய மனமுள்ளவா கேழ்க்கலாம். ஆள் இல்லேன்னா என்ன.. அந்த பிரம்மஹத்தி எழுதின விஷயமெல்லாம் அப்படியேத்தானே இருக்கு. அதுக்கு ஒரு பிராமணனா நான் பதில் சொல்லித்தான் தீருவேன்.

பிராமணாள் மேலே இந்த முருகேசன் தன் பதிவுகள்ள அள்ளி தெளிச்சிருக்கிற குற்றச்சாட்டுகளுக்கு அப்பப்போ பதில் சொல்லனாம்னு நினைச்சிருக்கேன்.

1.அன்னியருக்கு தாய் நாட்டை காட்டிக்கொடுத்தா:
ஏனய்யா நான் தெரியாமத்தா கேழ்க்கிறேன். நாட்டை காப்பாத்த வேண்டியவா சத்ரியாள். யுத்தத்துக்கு நிதி வழங்க வேண்டியது வைசியாள். அவாளுக்கு சேவைபண்ண வேண்டியது சூத்திராள். நல்லது கெட்டது சொல்றதுதான் எங்களாவா வேலை. நீங்க ஒத்துமையா இல்லே. அரை பர்லாங்,ஒரு பர்லாங்குக்கு ஒரு ராஜ்ஜியம். அந்த புரத்துலே கண்டவளோட உருண்டுண்டிருந்தேள். இவன் பெஞ்சாதியை அவன் தூக்கிப்போவான், அவன் பெஞ்சாதியை இவன் தூக்கிண்டு போவான் .யுத்தம். இதுக்கு நாங்களா பொறுப்பு. முஸ்லீம் ராஜாக்கள் தண்டெடுத்து வந்தப்போ நின்னு மோதி பசுவை, பிராமணாளை,பெண்களை காப்பாத்த வேண்டியது சத்ரியாள் பொறுப்பு. காப்பாத்தினேளா? இல்லையே. அப்படி காப்பாத்துவேள்ங்கற நம்பிக்கையை கொடுத்தேளா? இல்லையே. அப்புறம் பிராமணன் தன்னை, தன் அகத்து பெண்களை, தன் வித்தையை ,சம்பிரதாயங்களை எப்படி காப்பாத்திக்க முடியும்?

பிராமணன் பொறுமை காக்கனும்னு தான் சொல்லியிருக்காளே தவிர சொரணை கெட்ட ஜென்மமா இருக்கனும்னு சொல்லி வைக்கலியே. வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோன்னு பேசிட்டு எழுதிட்டு அதும்பாட்டுக்கு போயிடுத்து. அப்போ அந்த ஆசாமியோட பேச்சே நிஜமாயிராதோ? அதுக்கு ஒரு கவுண்டர் கொடுக்கவேணாமோ?

அதைத்தான் நான் செய்யறேன்.

No comments:

Post a Comment