Tuesday, 26 July 2011

பிராமண தூஷனை பண்ணீட்டு த்ரிமூர்த்தாள் கிட்டே சாதியை சொன்னதுக்கு அடி உதையா? Can't you believe ?
நான் இன்னாரை பார்த்து நீ இன்ன சாதின்னு சொல்லியிருந்தா அது குத்தமாகலாம். நான் என் சாதியத்தான் சொன்னேன். அது தப்பா? என் தோப்பனார் ஒரு பிராமணர். என் தாய் ஒரு பிராமணப்பெண் அப்போ நான் பார்ப்பான் தானே. நான் பார்ப்பான் தான்னு சொன்னா யாருக்கு வலிக்குது? எங்கே வலிக்குது?

அம்ருதமும் , ஆலாலமும் ஒரே பாற்கடல்ல உருவான மாதிரி என்னாட்டம் சத்ப்ராமணாள் வசிக்கிற இதே சித்தூர்ல ஒரு தீய சக்தி உருவாகிட்டுது. இந்த அச்சு பிச்சு இது நாள் வரை பண்ணாத அழும்புல்லை, போடாத ஆட்டமில்லை. எல்லாமே ஊத்திக்கும். அதான் ஹிஸ்டரி.

இந்த அச்சு பிச்சு அங்கங்கே நின்னு தானேதோ சாக்ரடீஸுங்கற நெனப்புல டமில் ப்ளாக்ஸை பத்தி அளந்து விட்டுண்டிருக்கும். இது என் காதுக்கும் வந்துது. இந்த அபிஷ்டு எல்லாத்துலயும் அரைகுறையாச்சே, அரை வேக்காடாச்சே இதும் வாசாலாக்குக்கு எத்தனை பேரு பலியாயிண்டிருக்காளோ என்னமோ பார்க்கலாம்னு ஒரு நோட்டம் பார்த்தேன்.

பச்சை பச்சையா எழுதறதும் , அதையும் சில அபிஷ்டுக்கள் கொண்டாடறதையும் பார்த்தேன். ஏதோ வயித்து பொழப்பு தொலையட்டும்னு பார்த்தா சதா ப்ராம்மண தூஷணை.

பிராமணங்கறவன் குருதத்வம். த்ரிமூர்த்தாளோட பகைச்சுண்டு பிராமணனை சரண் புகுந்தா சரணடைஞ்சவனை காப்பாத்தற சக்தி படைச்சவன் பிராமணன். ஆனால் பிராமண தூஷனை பண்ணீட்டு த்ரிமூர்த்தாள் கிட்டே போனாலும் பப்பு வேகாது.

ஏண்டான்னா த்ரி மூர்த்தாளுக்கு தெரியும். அவா என்ன யோசிப்போ.. " என்னடா இது நம்மோட ரச்சை பண்ணின்டு போனாலும் காப்பாத்தற பிராமணனையே துவேஷிக்கிறவனோட ப்ரேமை சாஸ்வதமா இருக்குமா.. செத்தாலும் இருக்காது"

அதனால தான் சொல்றேன் தெய்வ தூஷணை பண்ணவா யாரும் நிம்மதியா வாழ்ந்ததில்லை. அப்படியே வாழ்ந்தாலும் நிம்மதியா செத்ததில்லே.( உதாரணம் அண்ணாதுரை, பெரியார் - மூத்திர பானையை தூக்கிண்டு அலைஞ்சாரோன்னோ?) தெய்வ தூஷணை பண்ணவா கூட ஒரு சத்பிராமணனை சரண் புகுந்து அவன் காலை புடிச்சுண்டா கரையேறிடலாம் ( கல்கில கலைஞருக்கும் பிராமணாளுக்கும் உள்ள பிணைப்பை பத்தி ஞானி எழுதியிருக்கார் படிங்கோ)

இதெல்லாம் எதுக்கு சொல்லிண்டிருக்கேன்னு பார்க்கறேளா?

இவ்ள தூரம் வந்த பிறவு ஒளிவென்ன மறைவென்ன இந்த டமில் ப்ளாக்ஸ்ல தானேதோ கொம்பு முளைச்சவன்னு அலட்டிக்கிற , ஜோதிட ஓஷோ, வலையுலக மாத்ரு பூதம்னு உங்கள்ள சில அச்சு பிச்சுகள் கொண்டாடற முருகேசன் என்னை ஆளை வச்சு கூட்டு வச்சுண்டு ப்ளாக் மெயில் பண்ணான்.

இத்தனைக்கும் நானேதும் அவனோட மெயிலையோ , ப்ளாகையோ ஹாக் பண்ணிரலை. அவன் ரெகுலரா போவற நெட் சென்டருக்கு பை மிஸ்டேக் நானும் போனேன் போல. திரட்டில என் பதிவை இணைக்கறச்ச அந்த குரங்கோட மெயில் ஐடி வந்திருக்கு . நான் குருட்டாம்போக்குல அதை க்ளிக் பண்ணிட்டன் போல. என்னோட பதிவு அந்த எச்சக்கலையோட மெயில் ஐடியோட பப்ளீஷ் ஆயிடுத்து.

இதென்ன பஞ்சமா பாதகமா? பிரம்ம ஹத்தியா? எவனோ கட்டைல போறவன் என்னவோ இழவெடுத்த மிரட்டல் மெயில் அனுப்பி தொலைச்சான்னு சித்தூர் நெட் சென்டர்லயெல்லாம் அட்ரஸ் ப்ரூஃப். வாங்கிண்டுதான் சிஸ்டத்தையே கண்ணுல காட்டறாளா.. நெட் சென்டர்ல தனக்கு முந்தி சிஸ்டத்தை உபயோகிச்சவ விலாசமெல்லாம் பீராய்ஞ்சு என் விலாசத்தை தேடிப்பிடிச்சு ஆளனுப்பினான்.

வந்ததுங்க ஒன்னத்துக்கும் மூஞ்சில மீசை கூட கிடையாது. கழுத்துல சவுக்கம் போடாத குறையா என்னை ஆட்டோல கூட்டிண்டு போனதுங்க. அங்கே முருகேசனார் கீதோபதேசம் கணக்கா அறிவுரை சொல்ல விதியில்லாம கேட்டுண்டு வந்துட்டன்.

இந்த வாலை தெரியாத்தனமா மிதிச்சதுக்கே கிட்னாப்பு மிரட்டல்னா இது எந்த தலையை பார்த்து ஆடுதோ அதனோட லட்சணத்தை சொன்னா பிராணஹத்தியே கூட நடந்துரலாம். ஏதோ ஹார்ட் வேர் சாஃப்ட் வேர் தெரிஞ்சுண்டு பொழப்ப ஓட்டிண்டிருக்கேன். தோப்பனார் போஸ்டல் டிப்பார்ட்மென்ட்ல ஒர்க் பண்ணி ரிட்டையராகி ஜப மாலையும் கையுமா இருக்கார். தங்கச்சி ஒருத்தி கல்யாணத்துக்கிருக்கா. தாயாருக்கு மூத்திரப்பைல கல்லுன்னு சட்டிப்பானை கூட வித்து வைத்தியம் பார்த்தேன். எனக்கு கல்யாணத்துக்கு பார்த்துண்டிருக்கா. இத்தனை நடந்திருக்கு , போலீஸ்ல ஒரு புகார் கொடுக்கலாமேன்னு நீங்க கேழ்க்கலாம்.

இந்த வாலுக்கு ஒரு தலையிருக்கு. இந்த வாலுக்கு பின்னாடி நிருபர்னு ஒரு வாலு இருக்கு. ஸ்டேஷன்லயும் இந்த துஷ்டாளோட ராஜ்ஜியம் தானே நடக்குது. அது சரி இந்த விவரத்தையெல்லாம் இங்கே பதிவா போடறேளே இதனால ஆபத்துவராதான்னு கேழ்க்கலாம்.

இந்த வலையுலகத்துல இந்த துஷ்டன் தானேதோ பெரிய உத்தமன்னு பீத்திண்டிருக்கானே. அந்த இமேஜ் கெட்டுப்போயிருமேன்னு விளக்கம் சொல்ல முன் வரலாம். இல்லை இங்கே கடைய கட்டிண்டுர்ர மாதிரி இருந்தா என் மேல கை வைக்கட்டும்.

இந்த மாதிரி பிராமண துவேஷிகள் எல்லாம் அன்ன வஸ்திரத்துக்கு இல்லாம அவதிப்படப்போறா. இது நான் பன்னெண்டு வருஷமா ஜெபிச்சுண்டு வர்ர காயத்ரி மேல சத்தியம்.

No comments:

Post a Comment